Press "Enter" to skip to content

கொழும்பில் திடீர் தீ விபத்தில் 21 வீடுகளுக்கு நேர்ந்த சோகம்

கொழும்பு – தொட்டலங்க – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தீ பரவிய தகவல் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதிக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *