ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமானது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட இந்த சந்திப்பு, கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த சந்திப்பு இன்றைய நாளுக்கு பிற்போடப்பட்டது.
ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்று வரும் குறித்த சந்திப்பில், நிரந்த தீர்வு குறித்து வலியுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னராக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment