மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயற்சித்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் முரண்பட்டுக் கொண்டு இவர் கைதடியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்யப்போவதாக
அச்சுறுத்தியுள்ளார். மதுபோதையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Be First to Comment