இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இராமேஸ்வரத்தில் சுமார் 800 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment