ரஸ்ய ஜனாதிபதி புடினின் நெருக்கமான நண்பி எனக் கருதப்படும் அலினா கபேவாவும் அவரது மூன்று குழந்தைகளும் சுவிஸ் நாட்டின் அல்ப்ஸ் பகுதியில் பாதுகாக்கப்பட்ட பங்களா ஒன்றில் தங்கிவாழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அலினாவும் இப்போதும் அலினா அங்கே தஞ்சமடைந்துள்ளாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் உக்ரைன் மீதான போர் தொடங்கிய பின் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கேட்டு சுவிஸ் அரசின் மீது அழுத்தங்கள்அதிகரித்துள்ளன.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளில் Change.org இணையத் தளத்தில் தொடங்கப்பட்ட கையெழுத்துச் சேகரிக்கும் மனு, அலினாவை உடனடியாக வெளியேற்றுமாறு சுவிஸ் அரசைக்கோருகின்றது. ரஷ்யா, உக்ரைன், பெலா
ரஸ் நாட்டவர்களின் 75 ஆயிரம் கையொப்பங்களைக் கோரியுள்ள அந்த மனுவில் இதுவரை 66 ஆயிரம் பேர் ஒப்பமிட்டுள்ளனர்.
ரஷ்யநாடாளுமன்றமாகிய டூமாவின் உறுப்பினராகவும் விளங்கிய அலினா, போரை முன்னெடுப்பதற்காக புடின் தீட்டிய திட்டங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்ற சட்டங்களிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதால் சுவிஸ் அரசு தனது நடுநிலைத் தன்மையைப் பேணும் வகையில் அலினாவைவெளியேற்ற வேண்டும் என்றும் மனுகோருகின்றது.
சுவிஸ் மறைவிடத்தில் இருந்தவாறு புடினின் போருக்கு ஆதரவு வழங்கிவரும் அவரது ஒலிம்பிக் பதக்கங்களையும் பறிமுதல் செய்யவேண்டும்என்றும் பிறிதொரு மனுவில் கோரப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிறந்த அலினா கபேவாவுக்கு (Alina Kabaeva)தற்சமயம் 38 வயதாகும். இரண்டு இரட்டைக் குழந்தைகள் உட்பட அவரது ஜந்துபிள்ளைகளில் மூவர் அவரோடு சுவிஸில் தங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் அலினா கபேவா உலகறிந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை. ஒலிம்பிக்கில் தங்கங்களையும் உலக சம்பியன் போட்டிகளில் பதக்கங்களையும் அள்ளியவர். தாள நடனத்துடன் இணைந்த ஜிம்னாஸ்டிக்கின் வரலாற்றில் எப்போதும் பெருமைக்குரிய இடத்தில் இருப்பவர்.
2005 இல் விளாடிமிர் புடினின்”ஐக்கிய ரஷ்யா”கட்சியின் அதி உயர் அதிகார சபையின் உறுப்பினர்களில் ஒருவரானார்.புடினுடன் பொதுநிகழ்வுகளில் தோன்றினார்.2008 இல் நாட்டின் அரச ஊடகங்களுக்கான பொதுச் சபையின் தலைவியாக நியமிக்கப்பட்டபிறகு மொஸ்கோவில் மிகவும் செல்வாக்குமிகுந்த பெண்ணாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் மனைவியை விவாகரத்துச் செய்தபுடின் அலினாவுடன் நெருக்கமாகியமை அவர்களிடையிலான உறவைச் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கின.2008 இல் மொஸ்கோ பத்திரிகை ஒன்று (Moskovski Korrespondent) புடின் – அலினா உறவைக் கேள்விக்கு உள்ளாக்கியது. இருவரும் திருமணம் செய்யவுள்ளனர் என்ற தகவலைவெளியிட்டது. புடின் பின்னர் அதனைமறுத்திருந்தார். அதன் பிறகு இந்த விவகாரம் ரஷ்யாவில் பகிரங்க ரகசியமாக இருந்து வருகிறது.
Be First to Comment