யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வாள் வெட்டு கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுவில் தெற்கை சேர்ந்த நாகராசா மணிமாறன் (வயது 51) என்பவரே காயமடைந்துள்ளார்.
குறித்த நபரின் வீட்டினுள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வாள் வெட்டு கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , அதனை தடுக்க முற்பட்ட வீட்டு உரிமையாளர் மீது வாளினால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , மானிப்பாய் காவல்துறையினா் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Be First to Comment