கோண்டாவில் பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் வீட்டுக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்
கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்த நிலையில் இரு குழுவினருக்கிடையில் வாய்த்தர்க்கம் மூண்டுள்ளது. வாய்த்தர்க்கம் பின் மோதலாக மாறிய நிலையில்,
10 பேர் கொண்ட வன்முறைக் குழு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் உடமைகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களையும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment