நாட்டில் நேற்றைய தினம் 164 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன்படி, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 660, 797ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16, 454ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 32 பேர் நேற்று குணமடைந்தனர்.
தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தரவுகளுக்கு அமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 637, 088ஆக அதிகரித்துள்ளது.
Be First to Comment