சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று (27) காலை ரணில் விக்ரமசிங்க விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
முன்னாள் பிரதமரின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Be First to Comment