பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மலசலகூட குழியில் இளம் பெண்ணொருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்வத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
26 வயதுடைய இளம் யுவதியின் சடலம் ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரால் குறித்த விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாணந்துறையில் உள்ள சுற்றுலா விடுதியான அந்த இடத்தில் யுவதியுடன் மூன்று பேர் நெருங்கிய தொடர்பை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது
Be First to Comment