அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில் விஸ்தரிக்கப்படுவதுடன், ஈ.பி.டிபி. முன்வைத்து வருகின்ற துார நோக்கான சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், பொறுப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டாரக் குழுக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Be First to Comment