வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கை அரசாங்கம் பெற்றோல் தட்டுப்பாட்டை திறமையாக நிர்வகிக்கிறதா என்பதை சரிபார்க்க எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஆய்வு செய்தார். அவர் நம் உறவுகளை அழிக்க விரும்புகிறாரா? – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியாவை ஆளும் மத்திய அரசின் கட்சியான பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
அவர் தனது ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். பிம்ஸ்ரெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பு வந்துள்ளார். இங்கு பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி தனது ருவிட்டர் பதிவில் வெளிவிவகார அமைச்சர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “சமீபத்தைய பயணத்தின்போது முன்னாள் ஆணையாளர் போன்று கொழும்பில் சுற்றித் திரிந்தார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் பெற்றோல் தட்டுப்பாட்டை திறமையாக நிர்வகிக்கிறதா என்பதை சரிபார்க்க ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தைக்கூட ஆய்வு செய்தார். அவர் நம் உறவுகளை அழிக்க விரும்புகிறாரா? இந்தியவில் ஏன் ஆய்வு செய்யக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Be First to Comment