முல்லைத்தீவு மாவட்ட அழகக சங்கம், சிகை அலங்கார நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் சிலை அலங்கார சேவைகளுக்கான விலையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிகை அலங்கார நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு முடிவெட்ட 250 ரூபாயும்,பொரியர்களுக்கு முடிவெட்ட 300 ரூபாயும், சேவ் மட்டும் செய்ய 200 ரூபாயும், முடியுடன் சேவ் செய்ய 450 ரூபாயும், முடிவெட்டி தாடி ஒதுக்க 600 ரூபாயாகவும், முடி முழுமையாக அகற்ற 700 ரூபாயாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெண்பிள்ளைகளுக்கு முடிவெட்ட 500 ரூபாயாகவும், முடி வெட்டி டை அடிக்க 550 ரூபாயாகவும், மேலதிக சேவைக்கேற்ற வகையில் கட்டணங்கள் அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment