யாழ்.கீரிமலை – கூவில் பகுதியில் திடீர் சுகயீனமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தசாமி நிதர்ஷினி (வயது27) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். கெப்பிற்றிகொலாவ பகுதியில் குடும்ப நல உத்தியோகத்தராக பணியாற்றுவதாகவும்,
சுகயீனம் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியிருந்தார். எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 26ம் திகதி இவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் 27 ம் திகதி மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Be First to Comment