Press "Enter" to skip to content

பிரதேசசபை உழவு இயந்திரம் மீது சொகுசு பேருந்து மோதி கோர விபத்து..! ஒருவர் பலி, மேலும் 3 பேர் படுகாயம்..

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் வாகனம் மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகி தடம்புரண்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியைச் சேர்த்த 35 வயதுடைய ஜெயராம் பிரசாத் என்ற இளம் குடும்பத்தர் சம்பவ இடத்தில் உயிரித்துள்ளார்.

இவர் புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் சாரதியாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயம் அடைந்த மற்றைய மூவரும் சுகாதார சிற்றூழியர்களாவர்.

படுகாயமடைந்த மூவரும் அவசர அழைப்பு நோயாளர்காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவரின் உடல் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்து இடம்பெற்ற நேரத்திலிருந்து நீண்ட நேரத்தின் பின்னர் காயமடைந்தவர்களை அழைத்து செல்ல நோயாளர் காவு வண்டி வருகை தந்தமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *