Press "Enter" to skip to content

பிள்ளைக்கு பிரத்தியேக வகுப்பு நடத்தவந்த பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியருடன் தலைமறைவான 2 பிள்ளைகளின் தாய்!

யாழ்.மாவட்டத்திலுள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளரான 2 பிள்ளைகளின் தாய் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையின் தரம் 5 ஆசிரியருடன் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமாகாணத்தின் உயர்நிலை அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் குறித்த பெண் தனது பிள்ளைக்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக

வீட்டில் வைத்து பிரத்தியேக வகுப்புக்களை நடாத்த பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை அழைத்துள்ளார். அவரும் சம்மதித்து தொடர்ச்சியாக வீட்டில் வந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இவ்வாறு பிள்ளைக்கு வகுப்பு எடுப்பதற்காக வருகை தந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஆண் ஆசிரியர் தான் கல்வி கற்பிக்க வந்த பிள்ளையின் தாயுடன் தலைமறைவாகி விட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *