31.3.2022
12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் மீது ரஷியா சைபர் தாக்குதல் நடத்தலாம் என இங்கிலாந்து உளவுத்துறையின் தலைவர் எச்சரித்துள்ளார்.
12.35:முற்றுகையிடப்பட்ட நகரில் இருந்து மக்களை வெளியேற்ற உக்ரைன் 45 பேருந்துகளை அனுப்பியுள்ளது.
12.30: மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்ற ரஷிய சம்மதம் தெரிவித்துள்ளது.
06.30: உக்ரைனின் மரியுபோல் நகரில் குடிமக்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது என தகவல் வெளியானது.
04.30: உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய படைகள் வெளியேற தொடங்கியுள்ளன என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
02.15: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனுடன், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார்.
அதில், இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது மற்றும் இந்தோ-பசிபிக், உக்ரைன் மற்றும் உலகப் பொருளாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
00.25: உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் இன்றுவரை சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமாக உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என ஐ.நா.அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
இதில் அண்டை நாடான போலந்தில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
Be First to Comment