யாழ்.மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசல் யாழ்.மாவட்டச் செயலக அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட டீசலை மக்களுக்கு விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்.மடத்தடியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசலே மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை இரவு இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் டீசல் மக்களுக்கு விநியோகம் செய்யப்படவில்லை. மறுநாள் அதிகாலை டீசல் நிரப்ப சென்றவர்களுக்கு டீசல் இல்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அங்கு அதிகார்கள்
திடீர் சோதனை நடத்தியபோது அங்கு பதுக்கப்பட்டிருந்த டீசல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனை மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் யாழ்.மாவட்ட செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
Be First to Comment