ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு ஐனாதிபதிக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானபோது யாழில் குறித்த போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளரும் யாழ் மாவட்ட இணைப்பாளருமான உமா சந்திரபிரகாஷ் அவ்விடத்தை விட்டு தப்பி சென்றிருந்தமை பலராலும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.
போராட்டம் யாழ் நகரை அண்மித்த போது முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது. பதற்றத்தை தணிப்பதற்காக பொலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததுடன் குழப்பவாதிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் அனுப்புவதற்கு முயற்சித்த வேளை போராட்டக்காரர்கள் முச்சக்கர வண்டியையும் கடுமையாகத் தாக்கினர். பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பொலிஸாரே முச்சக்கர வண்டியை செலுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்த போதிலும் குறித்த போராட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் உமா சந்திரபிரகாஷ் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றிருந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிக்கா தனியாக நின்று குறித்த குழப்ப நிலையை சமாளித்ததை அவதானிக்க முடிந்தது
Be First to Comment