அரசாங்கத்தினால் தற்போதுள்ள இடர் நிலையின் காரணமாக இன்று மாலையிலிருந்து திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது இந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஊரடங்குச் சட்டத்தினை மதித்து ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்துள்ளதோடு மிக மிக அத்தியாவசியமான தேவையுள்ளோர் மாத்திரம் தமக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று அதற்குரிய அனுமதியினைப் பெற்று தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் அதனை தவிர்த்து வேறு எவரும் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கபட மாட்டார்கள் எனவே பொதுமக்கள் உணர்ந்து அரசின் ஊரடங்கு சட்டத்திற்கு வீட்டில் இருந்தவாறு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்
ஊரடங்கு நேரத்தில் வீடுகளில் இருந்து ஒத்துழையுங்கள்! யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு.
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment