ஹிஜ்ரி-1443 புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மாலை இடம்பெற்றிருந்தது.
இதன்போது, நாட்டின் பல மாவட்டங்களில் புனித ரமழான் மாத தலைபிறை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி, நாளை அதிகாலை முதல் நோன்பை கடைப்பிடிக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Be First to Comment