அரசாங்கத்தில் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று (01) அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாகவே மைத்திரிபால சிறிசேன இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள்தாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரத்திற்குள் இந்த தீர்மானம் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 5.30 மணி முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது
Be First to Comment