அவசரகாலசட்டத்தையோ அல்லது ஊரடங்கு உத்தரவையோ பிரகடனம் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை
இவை அனைத்தும் சட்டவிரோதமான உத்தரவுகள்இதன் காரணமாகவே நாங்கள் வீதிக்கு வந்துள்ளோம் அந்த உத்தரவுகளிற்கு அடிபணிய மறுக்கின்றோம் அவை சட்டவிரோதமான உத்தரவுகள் என எங்களிற்கு நன்றாக தெரியும்.
அவை அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள்
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சவால் விடுக்கும் எவருடனும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்படும்
எங்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை குறித்து நான் திருப்தியடைகின்றேன்
Be First to Comment