இன்னும் ஒரு வாரத்தில் அமைச்சரவையை கலைத்து காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்காவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக காபந்து அரசாங்கத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்வார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
Be First to Comment