அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் ஒன்றுகூடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்று தெரியவருகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் தீர்மானிப்பதற்காகவே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இந்நிலையில் காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் இதற்கு உடன்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகபோவதாக அந்தக் கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment