நாடளாவிய ரீதியில் இன்று (04) காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அமைதி, பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில், ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டத்தின் போது நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்
Be First to Comment