பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமல் ராஜபக்ஷவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனக பண்டார தென்னகோனின் வீடு மற்றும் ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பல வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தார்
Be First to Comment