சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மசாஹிரோ நொசாகி இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் வொசிங்கடனில் கலந்துரையாடல் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி பதவியேற்ற மறுநாளே இன்று பதவி விலகிய அதேவேளை, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment