தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு அதன் பங்காளி கட்சியான டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நீண்ட நாட்களாக கூட்டப்படாமல் உள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Be First to Comment