ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இதன்படி தான் உட்பட 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment