நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ யோசனை முன்வைத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் இணைந்து தீர்வொன்றை எட்ட வேண்டும்.
தற்போது அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
மக்களின் ஆணை ஊடாகவே தாம் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment