நாட்டின் பிரச்சினைகளுக்கு கொள்கையுடனும் திட்டத்துடனும் மாத்திரம் தீர்வு காண்பதற்கு தானும் தனது குழுவும் ஒன்றிணைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் ஒன்றிணைவோம். இந்த தற்காலிக அமைச்சுக்களை பெற நாங்கள் வரவில்லை. சந்தர்ப்பவாத இராஜாங்க, பிரதி அமைச்சுக்களை எடுத்துக்கொண்டு இசை நாற்காலி விளையாட்டுக்கு நாங்கள் தயாரில்லை.இந்த வாரத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நடவடிக்கையை கொண்டு வாருங்கள்.”
Be First to Comment