இரண்டாம் தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆண்டுடன் (2022) தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை நேரத்தை ஒரு மணித்திலாயம் வரை நீடிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கால அவகாசம் நீடிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்ளடக்க முடியாத பட்சத்தில், மூன்றாம் தவணையின் போது, சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Be First to Comment