பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக சபாநாயகர் மீண்டும் சபையை ஒத்திவைத்துள்ளார்.
இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து, நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படாத காரணத்தினால் சபையை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
பாராளுமன்றம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதன்படி, சபாநாயகர் பாராளுமன்றத்தை மீண்டும் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்
Be First to Comment