உக்ரேனில் குழந்தைகள் கண்முன்னே, தாய்மார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேனில்-ரஷ்யா இடையிலான போரானது 43 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், புச்சா நகரில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய இராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளதாகப் பல குற்றசாட்டுகளை உக்ரேன் முன்வைத்து வருகின்றது.
மேலும் ரஷ்யபடையினரால் உக்ரேன் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த ஜெலன்ஸ்கி ”உக்ரேனிய தாய்மார்களை அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் ரஷ்ய துருப்புக்கள் பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர்.
ஆகவே விளாடிமிர் புடினை போர்க் குற்றவாளி என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவிக்க வேண்டும். பல்வேறு குடும்பங்களை முழுமையாக ரஷ்யவீரர்கள் கொன்று எரிக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் கொள்ளை செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் குடிமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர், கை கால்கள் வெட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்தனர்.
அதுமட்டிமின்றி பல பேரின் நாக்குகள் வெட்டப்பட்டன, ஏனென்றால் அவர்கள் பேசுவதை ரஷ்யவீரர்கள் கேட்க விரும்பவில்லை ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment