புத்தாண்டை முன்னிட்டு இம்முறை விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தொடருந்து திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வழமையாக புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மற்றும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பிரதேசங்களுக்கு விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.
எனினும், இம்முறை பல்வேறு காரணங்களை முன்வைத்து தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்படவில்லை.
எரிபொருள் நெருக்கடியின் காரணமாக, சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ள இத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழியாக பெரும்பாலான பயணிகள், தொடருந்து சேவையை நாடுகின்றன.
இதனால் தொடருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, புத்தாண்டு காலத்தில் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்க ஆலோசனை வழங்குமாறு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Be First to Comment