இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தரவேண்டும் நாளை(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்றார்.
சமகால நிலைமைகள் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆடம்பர செயற்பாடுகளை கைவிட வேண்டும். மதரீதியாக ஜனாதிபதி செயற்பட்டதாலே இந்த நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி தனது செல்வாக்கை பயன்படுத்தி இனப்பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும் . ஆனால் அவர் அதனை செய்யவில்லை.
சிங்கள மக்களையும் அரசாங்கத்தையும் மோத விட்டு நாங்கள் வேடிக்கை பார்க்க கூடாது. அது தவறு . எல்லோருக்கும் உள்ள பொதுப் பிரச்சினையை தீர்க்க நாம் வழியை தேட வேண்டும்” என்றார்.
Be First to Comment