நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆதரவளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை பெறும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அது தற்போது பாரிய அரசியல் நெருக்கடியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Be First to Comment