தகவலறிந்த மெரைன் பொலீஸார் அவர்களை மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது 2006-ம் ஆண்டு அகதியாக வந்து தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் நிஷாந்த் என்பதும், 2010-ம் ஆண்டு இலங்கைக்கு திரும்பிய அவர், அங்கு மன்னார் மாவட்டம் சிலாவத்துறை கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீண்டும் அகதியாக தனது குடும்பத்தினருடன் தமிழகம் வந்ததாகத் தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
ஏற்கனவே இந்தியாவிலிருந்துவிட்டு தாயகம் திரும்பியிருந்தவர்கள் மீண்டும் படகில் தமிழகம் சென்றனர்!
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment