நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், கொழும்பு காலி முகத்திடலில் சில தரப்பினர் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கவீனமுற்ற இராணுவவீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
இராணுவவீரர்களின் உரிமையை பாதுகாப்போம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு அங்கவீனமுற்ற இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக கொழும்பின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி செல்வதால் கொழும்பின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெறிசல் அதிகரித்து காணப்பட்டது.
கொழும்பு கொள்பிட்டி பகுதி, காலிவீதி ஆகிய பகுதிகளில் வாகன நெறிசல் அதிகரித்துள்ளது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு மஹரகம பிரதேசத்திலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோல் இல்லை, டீசல் இல்லை, மண்ணெண்ணெய் இல்லை, எரிவாயு இல்லை. மின்சாரம் இல்லை, மருந்துகள் இல்லை. பால்மா இல்லை, சீமெந்து இல்லை. நாங்கள் தான் சிறப்பாக செய்தோம்.
74 வருட சாபத்தை இல்லதொழிப்போம், மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திவவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Be First to Comment