இலங்கையில் வாழும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழக நாழிதளான தினமணி செய்தி வெளியிட்டுள்ளளது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவுவது குறித்து தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்திருக்கும் வேண்டுகோளில், நாடு ஒன்றுபட்டிருக்கும் வேளையில், தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது, நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில், அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இந்த வேளையில் தமிழர்களுக்கு மட்டும் உதவுவது பிரிவினையை ஏற்படுத்தும். எனவே, இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.
சிங்கள தமிழ் மக்கள் ஒன்றுபட்டுவிட்டார்கள். சிங்கள மக்களுக்கும் உதவுங்கள் முதலமைச்சரிடம் கூட்டமைப்பு கோரிக்கை
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment