அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு இரண்டு முக்கிய கூறுகள் இருப்பதாகவும், அதில் முதலாவது கடனைத் திருப்பிச் செலுத்த நிதி வழங்குவது என்றும், இரண்டாவது அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு நாணயங்களை வழங்குவது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடனைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரைவில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு வரலாற்றில் மிகப்பெரும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை தேவையற்ற வரிக் குறைப்பினால் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், பணத்தை அச்சிடுவது என்பது ஒவ்வொரு மத்திய வங்கியும் வகிக்கும் ஒரு பாத்திரமாகும், அது எப்போதும் நல்லாட்சியுடன் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்
Be First to Comment