புதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இனறு (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர்,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்ற முறையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சமூக பிரச்சினை இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டோம்.
எமது பாராளுமன்ற குழு, மத்திய குழு, நிபுணர் குழுவினர் உள்ளிட்ட சகல தரப்பினரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டோம் என்றார்.
Be First to Comment