யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து வழிப்பறி கும்பல் கடைத் திறப்புகள் வைக்கப்பட்டிருந்த பையை பறித்து சென்றுள்ளது
நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் யாழ். நகரில் உள்ள பிரபல நகை கடையின் உரிமையாளர்
ஒருவர் கடையை பூட்டி தனது காரில் சென்று வீட்டின் முன்பாக இறங்கியுள்ளார். இதன்போது கடை உழிமையாளரை தள்ளிவிட்டு அவரது கையில் இருந்த பையை வழிப்பறி கும்பல் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளது.
குறித்த பையில் கடையின் திறப்புக்களை மட்டுமே எடுத்துச் சென்றபோதும் காசு அல்லது நகை எவையும் எடுத்துச் செல்லாதமையினால் அவை தப்பித்தன.
இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட கடை உரிமையாளர் உடனடியாக கடைக்கு திரும்பி சென்று கடையிலிருந்த அனைத்து பூட்டுக்களையும் மாற்றியுள்ளார்
Be First to Comment