ராஜபக்ஷர்களுடன் கூடிய அமைச்சரவை மீண்டும் உருவாக்கப்படுமெனில் மீண்டும் நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவர் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கமொன்றை தற்காலிகமாக அமைத்து நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்குமாறே நாம் கோருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்துரைத்த அவர், ‘கடந்தவாரம் பாராளுமன்றம் கூடியது. எவ்விதத் தீர்மானங்களும் எட்டப்படாமலேயே பாராளுமன்ற அமர்வு முடிவுக்கு வந்தது.
உண்மையில் பாராளுமன்றத்தில் என்ன நடக்கின்றது என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment