பொலன்னறுவை மீகஸ்வௌ, மஹஅம்பஸ்வெகக பிரதேசத்தில், குடும்ப தகராறு காரணமாக பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று மீகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்.
மஹஅம்பகஸ்வௌ பிரதேசத்தை சேர்ந்த 21 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில ஏற்பட்;ட முறுகலையடுத்து, கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை படுகொலை செய்துள்ளார் என்று தெரிவருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயது நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment