எதிர்வரும், 3 தினங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதிவரை இவ்வாறு கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதால், அதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தொடர்பான கட்டுப்பாடு மண்ணெண்ய்க்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment