நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 10 மணியளவில் அந்த வீட்டிற்கு வந்த 6 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பல் குறித்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது.
இதனால் முச்சக்கர வண்டி பகுதிகளில் எரிந்து நாசமாகியாள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment