Press "Enter" to skip to content

கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியேறும்355 பேர் வட மாகாணத்திற்கு நியமனம்!

கல்வியல் கல்லூரியில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களில் 355 பேர் வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பாடசாலைகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரிய மாணவர்கள் ஆசிரியர்களாக பாடசாலைகளிற்கு நியமனம் பெறும் சமயம் கடந்த ஆண்டுகளில் எமது மமாகாணத்திற்கு 250 முதல் 300 வரையான ஆசிரியர்களே நியமிக்கப்பட்டனர். இதனால் நாம் முற்கூட்டியே இந்த ஆண்டு வன்னிப் பாடசாலைகளின் தேவை கருதி அதிக ஆசிரியர்களை எண்ணிக்கை வாரியாக கோரியிருந்தோம்.

இதன் பயணாக 18 பாடங்களிற்கான 355 ஆசிரியர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு நியமிக்கப்பட்டு அவர்களின் பெயர் விபரங்கள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் இந்த 355 ஆசிரியர்களிற்கும் மேலதிகமாக வடக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளிற்கும் சில நூறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *