Press "Enter" to skip to content

குற்றப்பிரேரணையை கொண்டுவந்து ஜனாதிபதியை வெளியேற்றுவது என்பது சாதாரண விடயமல்ல!

கொழும்பில் இன்று (13) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கவனத்திற்கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு முன்கூட்டியே கூறிய தரப்பினர் நாம்.

நாம் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாததால் இவ்வாறான நெருக்கடியானது தீவிரமடையும் என்று முன்கூட்டியே நாம் அறிந்துகொண்டதால் மார்ச் மாதம் 2 ஆம் திகதி எமது 11 கட்சிகளும் விசேட மாநாட்டை நடத்தினோம்.

இந்த மாநாட்டில் உண்மை நிலவரத்தை மக்களுக்கு கூற வேண்டி ஏற்பட்டது. அந்த உண்மையை வெளிக்கொண்டு வந்ததன் காரணமாகவே நானும் உதய கம்மன்பிலவும் அமைச்சுப் பதவியிலிருந்து வெறியேற்றப்பட்டோம். அதனை மகிழ்ச்சியாக நாம் ஏற்றுக்கொண்டோம்.

அந்த இடத்திலிருந்து 11 கட்சிகளும் மிகவும் தீர்மானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *